நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் திடீர் திருப்பம் - வசமாக சிக்கிய பெண்

Update: 2025-01-28 03:23 GMT

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் வசித்து வந்த நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட வழக்கில், வங்க தேசத்தை சேர்ந்த ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் குற்றவாளி ஷரிஃபுல் இஸ்லாம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த குக்குமோனி ஜஹாங்கீர் ஷேக் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் பெயரில் பதியப்பட்ட சிம்கார்டை ஷரிஃபுல் இஸ்லாம் பயன்படுத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பெண்ணை கைது செய்துள்ள போலீசார், மும்பை அழைத்து வந்து அவரை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்