நாட்டை உலுக்கிய சைஃப் கத்திக்குத்து சம்பவம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவத்தில், குற்றவாளி வீட்டிற்குள் நுழைந்தபோது பாதுகாவலர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர். மும்பை பாந்த்ராவில் உள்ள கட்டிடத்தின் முக்கிய நுழைவாயில் வழியாக ஷரிபுல் இஸ்லாம் ஷேஹ்ஸாத் நுழைந்த நிலையில், அந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 பாதுகாவலர்களும் சம்பவத்தின்போது தூங்கிக் கொண்டிருந்ததாகவும், சுவர் ஏறி குதித்தபோது சத்தம் கேட்காமல் இருக்க ஷரிபுல் இஸ்லாம் தனது காலணியை கழற்றி பையில் வைத்து, தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.