தேவ பிரசன்னத்தின்படி புதிய நவகிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலின் இடது புறம் உள்ள நவகிரக மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளதால் நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.