ரூ.3,800 கோடி சொத்து யாருக்கு? உயிர் போகும் முன் ரத்தன் டாட்டா எழுதி வைத்த உயில்
மார் 3,800 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா 2022 ஆம் ஆண்டு எழுதிவைத்த உயில் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ரத்தன் டாட்டா தனது உயிலில்,
டாடா சன்ஸ் பங்குகள் உட்பட பெரும்பாலான சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு எழுதி வைத்துள்ளார்.
ரத்தன் டாட்டா இறக்கும்போது அவரிடம் ஒரே ஒரு நோக்கியா மொபைல் போனும், சில உயர் ரக கைக்கடிக்காரங்கள் உட்பட சுமார் 34 கைக்கடிகாரங்களும் இருந்துள்ளன.
தனது வீட்டு வேலையாட்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு சுமார் மூன்றரை கோடி ரூபாய் எழுதி வைத்துள்ளார்.
மேலும், நாய்கள் மீது பேரன்பு கொண்டவராக திகழ்ந்த ரத்தன் டாடா, தனது செல்லப் பிராணிக்கு 12 லட்ச ரூபாய் உயில் எழுதி வைத்துள்ளார்.
நீண்டகால ஊழியர்களுள் ஒருவரான சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு 51 லட்ச ரூபாய் கடன் தள்ளுபடி உட்பட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உயில் எழுதப்பட்டுள்ளது.
வீட்டின் மேற்பார்வையாளர் சுப்பையா கோனாருக்கு 36 லட்ச ரூபாய் கடன் தள்ளுபடியுடன் 66 லட்சமும்,
ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரான சாந்தனு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்ததோடு, தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு வழங்கிய கல்வி கடனையும் அவர் தள்ளுபடி செய்துள்ளார்.
வங்கி நிரந்தர வைப்பு, சில மதிப்புமிக்க பொருட்கள் உட்பட
சுமார் 800 கோடி ரூபாய் சொத்து டாடா குடும்பத்தைச் சேர்ந்த ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரிகளான ஷிரின் ஜிஜிபாய், டயானா ஜிஜிபாய் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், இன்னொரு 800 கோடி ரூபாய் சொத்து மதிப்பு
டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியர் மோஹினி எம். தத்தாவுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
டாடாவின் 82 வயது சகோதரர் ஜிம்மி நவல் டாடாவுக்கு ஜூஹூவில் உள்ள பங்களாவும்,
ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரான மேஹுல் மிஸ்திரிக்கு அலிபாக்கில் உள்ள பங்களாவும், டாட்டா பயன்படுத்திய மூன்று துப்பாக்கிகளும் உயிலாக எழுதப்பட்டுள்ளது.