கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் மட்டும் காணப்படும் இருவாச்சி பறவை இனங்கள் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கடற்கரை பகுதியான மழமுழக்கி பகுதியில் அமைந்துள்ள மரங்களில் காணப்பட்டது. இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இருவாச்சி பறவையை படம் பிடிப்பதற்காக அப்பகுதியில் அதிகளவில் குவிந்தனர். நீண்ட நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த பறவை மீண்டும் பறந்து வனப்பகுதிக்கு சென்றது.இது குறித்து பறவை ஆய்வாளர்கள் தெரிவிக்கையில் கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் மட்டும் காணப்படும் இந்த இருவாச்சி பறவையை கடற்கரை பகுதியில் காண்பது மிகவும் அரிது என்று கூறினர். பல்வேறு பழங்கள், காய்கறிகள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்த பகுதி என்பதால் இந்த பறவை இங்கு வந்திருக்கலாம் என்று கல்லூரியின் வனத்துறை ஆராய்ச்சியாளர் சினேகா கூறியுள்ளார்.