நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கோலாகலம் - புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மசூதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் தொழுகை செய்து வழிபட்டனர். அதன்படி, டெல்லியில் உள்ள ஜமா மசூதி, மும்பையில் உள்ள ஜுமா மசூதி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஈத்கா மசூதி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை செய்து வழிபட்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்டனர்.