Rahulgandhi | SIR | "வாக்கு திருட்டை மறைக்க தான் இந்த நடவடிக்கை.." - இறங்கி அடிக்கும் ராகுல் காந்தி
"வாக்கு திருட்டு முறைகேட்டை மறைப்பதற்காகவே SIR பணி" - ராகுல் காந்தி வாக்கு திருட்டு முறைகேட்டை மறைப்பதற்காகவே வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியல் பணி நடைபெறுகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகவும், பெரிய அளவிலான முறைகேடுகளை மறைப்பதற்காகவே தற்போது 9 மாநிலங்களில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.