Putin India Visit | PM Modi | இந்தியா வரும் புதின் | ரஷ்யாவிலிருந்து வந்த முக்கிய செய்தி
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் இருதரப்புக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய ரஷ்ய உறவு நெருக்கமாக உள்ள நிலையில், இருநாட்டு தலைவர்களும் தனிப்பட்ட பிணைப்பை கொண்டிருப்பதாக மந்துரோவ் குறிப்பிட்டார். அத்துடன் பல இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயில்வதாகவும், அவர்களில் 14 ஆயிரம் பேர் மருத்துவம் பயில்வதாகவும் தெரிவித்த அவர், இந்தியா ரஷ்யா இடையே வர்த்தகம் மட்டுமல்லாது கல்வி, வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் விரிவடைந்து வருவதாக குறிப்பிட்டார். ரஷ்ய அதிபர் புதின் அரசுமுறை பயணமாக வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.