புஷ்பா-2 தயாரிப்பாளருக்கு அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி
புஷ்பா-2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனி, வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால், தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.’புஷ்பா-2 திரைப்படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்னேனி, தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், கேம் சேஞ்சர் திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு, சிரிஷ், தில் ராஜுவின் மகள் ஹன்சிதா ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் 55 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.