கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில், மாம்பழங்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனிவாசபுரா தாலுகாவில் தற்போது மாம்பழ உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளது. இதனால் நஷ்டத்தை சந்தித்து வரும் அப்பகுதி மாம்பழ விவசாயிகள், மாம்பழத்திற்கு 10 முதல் 15 ரூபாய் விலை உயர்த்தி தர வேண்டும் எனக்கூறி, மாம்பழங்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.