PM Modi | Trump | "ட்ரம்ப்பை கண்டு அஞ்சுகிறார் பிரதமர் மோடி"- கார்கே பகீர் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பார்த்து, பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் 17 முறை கூறிவிட்டபோதிலும், பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார். ட்ரம்ப்பைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று கார்கே தெரிவித்தார்.
இஸ்ரேலில் இருந்து மேலும் 224 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் சிந்து மூலம் அழைத்துவரப்பட்ட இந்தியர்களை மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வரவேற்றார். சிந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை 818 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை, பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்ந்து நிறைவுப்பெற்றது. இதனைதொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்(SENSEX) 700 புள்ளிகள் உயர்ந்து 82,756லும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி (NIFTY) 200 புள்ளிகள் உயர்ந்து 25,245லும் நிறைவடைந்தது. இஸ்ரேல், ஈரான் இருநாடுகளும் போர்நிறுத்த ஒப்புதலுக்குப் பிறகு பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.