ATM | Summer | பாடாய் படுத்தும் பவர்கட்... ATMல் தஞ்சம் புகுந்த குடும்பம்... வைரலாகும் சம்பவம்
உத்தரப்பிரதேசத்தில் மின்வெட்டிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குடும்பம் ஏடிஎம் மையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோடை துவங்கியதில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதேசமயம், அங்கு பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டுகளும் ஏற்பட்டுவருகின்றன. இதனால், மக்கள் கோடை வெப்பம் மற்றும் மின்வெட்டு ஆகிய இரண்டுடனும் போராடி வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் நடந்த ஒரு சம்பவம், அங்கு மின்வெட்டால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை காட்டியுள்ளது. இரவுநேர மின்வெட்டிலிருந்து தப்பிக்க ஒரு குடும்பம் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.