AI | Republic Day | முதல்முறை `AI ஸ்மார்ட் கிளாஸோடு’ இறங்கிய போலீஸ் - ``முகத்தை அப்படியே காட்டும்’’
குடியரசு தினம் - கண்காணிப்பு பணியில் ‘ஏஐ தொழில்நுட்பம்
குடியரசு தின விழா பாதுகாப்பிற்காக டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் முறையாக முகத்தை அடையாளம் காணும் வசதி கொண்ட ‘ஏஐ ஸ்மார்ட் கிளாஸ் அணிந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது போன்று, நாடு முழுவதும் விழாவிற்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 29ஆம் தேதி விஜய் சவுக் பகுதியில் நடைபெறும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியுடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடைகிறது.