"தரதரவென இழுத்துச்சென்ற போலீசார்" |இளம்பெண் மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து |
ராஜஸ்தானில், மது அருந்துவிட்டு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளம்பெண்ணால், 14 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டிய சன்ஸ்கிருதி என்ற பெண், பைக்கின் மீது மோதியதில் ஆசிமா என்ற 14 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், சிறுமியின் சகோதரியும், தந்தையும் சிகிச்சையில் உள்ளனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோட முயன்ற அந்த இளம்பெண்ணை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவரை போலீசில் ஒப்படைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.