Pipe smoke || குழாய தொறந்தா தண்ணிக்கு பதிலா புகை பகீர் வீடியோ
தெற்கு மாவட்டம் ராமநகரம் எம்.ஜி.ரோட்டில் இன்று விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் வரும் குழாயை திறந்தால் அதிலிருந்து புகை எழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆரம்பத்தில் கேஸ் குழாயில் வாயு கசிந்ததாக நினைத்து அச்சத்துடன் வீடுகளிலிருந்து வெளியே ஓடினர். பின்னர் அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தியபோது அது நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின்கம்பிகளில் எரிந்து, அந்த தீ பக்கத்தில் இருந்த குடிநீர் குழாயிலும் பரவி அதனால் புகை வந்துள்ளது என தெரிந்தது.