1,500 ஆண்டுகால பிரம்மாண்ட பொக்கிஷம்... உலகை வியக்க வைத்த அதிசய கண்டுபிடிப்பு

Update: 2024-05-23 08:16 GMT

பெரு நாட்டில், ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல் ஓவியத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

ட்ரூஜிலோவில் அருகே உள்ள வாலே டி விரு பகுதியில் ட்ரோன் பறந்தபோது, ஏதேச்சையாக இந்த பிரம்மாண்ட பறவை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அ​ப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த பறவை ஓவியம் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது. மேலும், அங்கு கல் கிணறுகள், பழமையான பீங்கான் ஓடுகள் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன. ​தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்