உலக சுகாதார அமைப்பில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது
ஜெனீவாவில் உள்ள WHO தலைமையகத்தில் பேசிய இந்திய தூதர் அனுபமா சிங், "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கிறது..." என காட்டமாக தெரிவித்தார்.
"பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்றும், இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கி துல்லியமாக நடத்தியதாகவும் விளக்கியுள்ளார்.
பாகிஸ்தானில் பொதுமக்கள் குறிவைக்கப்படவோ அல்லது பாதிக்கப்படவோ கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்ததாக சுட்டிக்காட்டிய அனுபமா சிங், பயங்கரவாதத்தை வளர்க்கும் ஒரு அரசு அதனால் பாதிக்கப்பட்டவர்களாக மாறுவேடமிட முடியாது என்றும் கடுமையாக சாடியுள்ளார். அனுபமா சிங்கின் பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.