டார்க்நெட் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட கும்பலின் முக்கிய நபரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆப்ரேஷன் MELON எனும் சோதனையில், டார்க்நெட்டில் "Ketamelon" என்ற பெயரில் செயல்பட்ட முக்கிய நபரான கொச்சியைச் சேர்ந்த எடிசன் பாபுவை கைது செய்தனர். இந்த சோதனையில், ஒரு கோடி மதிப்புள்ள எல்எஸ்டி, கெட்டமைன் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.