கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் திரண்ட பாஜகவினர், ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் ஆட்சியில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டினர். மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசு தவறிவிட்டது என்றும், மாநிலத்தில் காவல் துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதேபோல், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.