Jammu & Kashmir | அரை நிர்வாணமாக ஃபேஷன் ஷோ... கொந்தளித்த உமர் அப்துல்லா - பறந்த அதிரடி உத்தரவு

Update: 2025-03-10 16:28 GMT

ரமலான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோ குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்...

குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ பேசுபொருளாகியுள்ளது...

புனித ரமலான் மாதத்தில் அரை நிர்வாணமாக ஆண்களும் பெண்களும் பனியில் நடந்து சென்றது காஷ்மீரின் தார்மீக, நெறிமுறை மதிப்புகளைத் தகர்க்கும் முயற்சி என பலரும் விமர்சித்தனர்...

இந்நிலையில், உள்ளூர் மக்களின் உணர்வுகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் உமர் அப்துல்லா, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்