"ஆஸ்திரேலிய ஓபனில் போட்டிக்கு பின் பேட்டியளிக்க போவதில்லை"
- தன்னையும், செர்பிய ரசிகர்களையும் அவமதித்து பேசிய ஆஸ்திரேலிய நிருபர் மன்னிப்பு கோராததால், இனி களத்தில் பேட்டியளிக்க போவதில்லை என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
- லெஹெக்கா உடனான போட்டிக்கு பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளிக்க மறுத்து ஜோகோவிச் களத்தை விட்டு வெளியேறினார்.
- இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுதொடர்பாக ஜோகோவிச் விளக்கமளித்தார்.
- அதில், கடந்த வாரம் தன்னை அவமதித்து பேசிய ஆஸ்திரேலிய நிருபரும், தொலைக்காட்சி நிறுவனமும் மன்னிப்பு கோராததால், இனி ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது, களத்தில் பேட்டியளிக்க போவதில்லை என உறுதிபட தெரிவித்தார்.