விரைவு ரயிலில் வேலை செய்யாத ஏசி | வந்து பார்த்து ஷாக்கான அதிகாரிகள்

Update: 2025-08-14 05:08 GMT

லக்னோவில் இருந்து பீகாருக்கு விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் மறைத்து கடத்தப்பட்ட மதுபான பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லக்னோவிலிருந்து பீகார் மாநிலம் பரவுனி செல்லும் விரைவு ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர், தனது கோச்சில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை என அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். சோதனை செய்த போலீசார், ஏசி குழாயை திறந்து பார்த்தபோது அங்கே பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 150 மது பாட்டில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்