அரியானாவின் அம்பாலா பகுதியில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வெள்ளநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் உட்புகுந்ததால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். மழை, வெள்ள பாதிப்பால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்பாலா மக்கள் வேதனை தெரிவித்தனர்.