தியேட்டருக்குள் குதிரை சவாரி செய்த ரசிகர் - ஒரு நொடி உறைந்து பார்த்த மக்கள்
நாக்பூரில், சாவ்வா திரைப்படம் பார்ப்பதற்காக குதிரையில் திரையறங்கிற்கு வந்த ரசிகரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள சாவ்வா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.