அந்தரத்தில் தொங்கிய லாரி.. 12 பேர் உயிரை குடித்த கோர விபத்து

Update: 2025-07-10 03:09 GMT

குஜராத் மாநிலம் வதோதராவில், மகிசாஹர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கம்பீரா பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது இருந்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் மூழ்கின. இதில் டேங்கர் லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட​ன. பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 1986ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்