Lorry Accident | 5 கி.மீ தாறுமாறாக ஓடிய லாரி.. உடல் சிதறி 14 பேர் மரணம் - இதுவரை நடக்காத கோரம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில், 10க்கும் மேற்பட்டோர் பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய்ப்பூரின் லோஹமண்டி சாலையில், அதிவேகமாக வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கொடூரமாக மோதியது. எதிர் திசையில் வந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியும் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் சென்றது. சாலை முழுக்க சிதறிக் கிடந்த உடல்கள், காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்தன. இந்த கோர விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பலியான நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மது போதையில் இருந்ததாக கூறப்படும் லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.