நாட்டையே நடுங்க வைத்த கொல்கத்தா மருத்துவர் கொ*ல... நீதி கேட்டு பிரமாண்ட ஊர்வலம்

Update: 2025-02-09 15:58 GMT

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மருத்துவரின் பிறந்த நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஜூனியர் சீனியர் மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஷியாம் பஜார் வரை ஊர்வலமாக சென்றனர். பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு நீதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, தனது மகளின் பிறந்த நாளில், வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து நீதி கிடைக்க வேண்டுவதாக, கொல்லப்பட்ட மருத்துவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்