கொல்கத்தா டாக்டர் கொலை.. மரண தண்டனை கொடுக்காதது ஏன்? - வெளியான முக்கிய தகவல்

Update: 2025-01-20 14:23 GMT

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்காதது குறித்து வழக்கறிஞர் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்காமல், சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்ததாக வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட மருத்துவரின் குடும்பத்திற்கு, 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்