Kerala | Schoolstudent | வகுப்பறையில் அடுத்தடுத்து மயங்கிய மாணவர்கள், ஆசிரியர்.. திடீர் பரபரப்பு
கேரளாவில் சாலையில் கிடந்த பெப்பர் ஸ்பிரே டப்பாவை எடுத்துச் சென்று வகுப்பறையில் பயன்படுத்திய மாணவரால் 9 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தை அடுத்த கல்லியூர் அரசு பள்ளியில் பயின்றுவரும் மாணவர் ஒருவர், சாலையில் கிடந்த பெப்பர் ஸ்ப்ரேவை வகுப்பறையில் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வகுப்பறையில் பரவிய புகையால் அங்கிருந்த மாணவர்களும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 9 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.