Kerala Protest ``கேரளாவில் Police ஆட்சி.. CM பதவி விலகணும்’’ எதிராக திரண்ட மாணவர் சங்க உறுப்பினர்கள்
கேரளாவில் போலீஸ் ஆட்சி நடைபெறுவதாக கூறி , முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி கேரள மாணவர் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுஜித்தை போலீசார் தாக்கிய விவகாரத்தில் காவல்துறைக்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க உறுப்பினர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.