Kerala High Court | "பாலியல் சேவை பெறுபவர் வாடிக்கையாளர் அல்ல"- கேரள உயர் நீதிமன்றம்
பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்களை வாடிக்கையாளர்கள் என்று கருத முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் போலீசார் சோதனையின் போது, பாலியல் தொழிலாளியையும், உடன் இருந்தவரையும் கைது செய்தனர்.
சோதனையில் சிக்கியவர் தான் வாடிக்கையாளர் எனவும், தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் முறையிட்டார்.