கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தமிழர்கள் மூச்சுத்திணறி பலி கேரள மாநிலம் இடுக்கி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கிய மூன்று தமிழர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இடுக்கியை அடுத்த கட்டப்பனையில் ஹோட்டல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தேனி மாவட்டம் கம்பத்தை சார்ந்த ஜெயராம், கூடலூர் சுந்தரபாண்டி மற்றும் மைக்கேல் ஆகியோர் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நிலையில், 3 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினர் பக்கவாட்டில் ஜெசிபி வாயிலாக பள்ளம் தோண்டி சுமார் இரண்டு மணிநேரம் போராடி, 3 பேரது உடல்களையும் மீட்டனர்.