500 ரூபாய் நோட்டு செல்லாதா? - திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவா?

Update: 2025-06-04 02:42 GMT

2026 மார்ச் மாதத்திற்குள் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறும் என யூடியூப் சேனலில் வெளியான செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவல் தவறானது என்றும், ரிசர்வ் வங்கி அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும், பொது மக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்