வாட்ஸ் அப் பயனாளிகளை மத்திய அரசு கண்காணிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியின் விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் வாட்ஸ் அப் பயனாளிகள் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம், இந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.