கேரளாவில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு - தடைகோரிய மனு மீது சுப்ரீம்கோர்ட் இறுதிமுடிவு
சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு எதிரான மனு நிராகரிப்பு
கேரளாவின் பம்பையில் நடக்கவிருக்கும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் பம்பையில் வரும் 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்த, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த மாநாடு வணிக மற்றும் அரசியல் ரீதியில் நடத்தப்படுவதால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை அனுமதிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு, ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது