மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மழை, வெள்ளத்திற்கிடையே நிகழ்ந்த சுவாரஸ்யமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மும்பையில் ஒரு குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளம் சூழ்ந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிய நிலையில், இருவர் டேபிள் மற்றும் நாற்காலிகளை போட்டு மது அருந்திய காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதனிடையே, மும்பையில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் ஸ்பைடர் மேன் ஆடை அணிந்த ஒருவர், மழை நீரை அகற்றிய காட்சிகள் பலரையும் வெகுவாக ஈர்த்தது.