இந்தியாவின் சொந்த தயாரிப்பு... வானை அலறவிட ரெடியாகும் Tejas Mark 1A
ஜெனரல் எலக்ட்ரிக் எனப்படும் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து தேஜஸ் மார்க் 1ஏ ரகப் போர் விமானங்களை தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு மூன்று GE-404 இன்ஜின் வந்துள்ளது. இது இந்தியாவின் சொந்த தயாரிப்பு போர் விமான திட்டமான தேஜஸ் Mark-1A, சர்வதேச தரத்திலான உற்பத்தி திறனை அடைவதற்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் நான்காவது என்ஜின் வருவதாகவும், நடப்பு நிதியாண்டுக்குள் மொத்தம் 12 என்ஜின்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.