அரபிக்கடலில் இறங்கிய இந்திய போர்க்கப்பல்கள்.. அனலை கக்கி பாய்ந்த ஏவுகணை
அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் தயார்நிலை மற்றும் இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாக்கும் திறனை நிரூபிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர துல்லிய தாக்குதல், தாக்குதலுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் குழுவினரின் தயார்நிலை போன்றவை மறுமதிப்பீடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.