செலவு செய்ய பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்

Update: 2025-02-28 04:45 GMT

இந்தியாவில் 100 கோடி மக்களிடம், அத்தியாவசியத் தேவை தவிர, வேறு எதற்கும் செலவு செய்ய பணம் இல்லாத சூழல் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ப்ளும் வென்சர்ஸ் (Blume Ventures) என்ற முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 விழுக்காடு மக்களிடம் 57 விழுக்காடு பணம் குவிந்துள்ளதாகவும், 50 விழுக்காடு மக்களின் வருமானம் 22 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்