``நானும் இந்தியன் தான்’’ - உலகையே அசர விட்ட ஐரோப்பிய கவுன்சில் தலைவரின் வார்த்தை
நான் வெளிநாட்டு வாழ் இந்தியர் என கூறிய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியோ கோஸ்தா
தாம் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் மட்டுமல்ல இந்திய சிறப்பு குடியுரிமை பெற்றவரும்கூட என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியோ கோஸ்தா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் குடும்பம் கோவாவை சேர்ந்தக்து என்பதால் இந்தியாவுடன் தமக்கு தனிப்பட்ட பிணைப்பு இருப்பதாக கூறிய அவர், இந்தியாவுடனான தனது உறவு அரசியல் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமானதும் கூட என்றும் நெகிழ்ந்தார்.
இந்தியா–ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவு புதிய உயரத்திற்கு செல்லும் தருணம் இதுவென்று கூறிய கோஸ்தா,இருதரப்பும் ஜனநாயக மதிப்புகள், பொருளாதார வளர்ச்சி, உலக நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.