ஆட்டோவுக்குள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த குதிரை
மத்தியப்பிரதேசத்தில், மற்றொரு குதிரையுடன் சண்டையிட்டபோது ஒரு குதிரை ஆட்டோவிற்குள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தது.
ஜபல்பூரில் உள்ள சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப்பின் குதிரை வெளியேற்றப்பட்டது. சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.