Gujarat Train | பெரிய விபத்தில் இருந்து ரயிலை ஜஸ்ட் மிஸ்ஸில் காப்பாற்றிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ
குஜராத் மாநிலம் கோத்ரா அருகே பகீரத் சுரங்கத்தில் சுரங்க வெடிப்பு ஏற்பட்டது. இதில் பெரிய கல் ஒன்று அருகில் இருந்த ரயில் தண்டவாள மின் கம்பியில் மோதியது. இதில் ரயில் என்ஜின்களுக்கு மின்சாரத்தை வழங்கும் கான்டிலீவர் சேதமடைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அவ்வழியாக வந்த சரக்கு ரயிலை நிறுத்த சிகப்பு நிற துணியை அசைத்து ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுத்தனர். உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.