மகாராஷ்டிராவில் கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டிய பெண், காரோடு கால்வாய்க்குள் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேலா பகுதியில் இருந்து உல்வே பகுதிக்கு கூகுள் மேப்பை பார்த்தபடி காரில் சென்ற ஒரு பெண், நவி மும்பையின் பெலாப்பூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக, கூகுள் மேப்பில் மேம்பாலத்தின் கீழே உள்ள பாதையை காட்டியதால், அவ்வழியாக சென்ற காரானது கால்வாயில் கவிழ்ந்து மூழ்கியது. பின்னர் கால்வாயில் உயிருடன் தத்தளித்த கார் பெண்ணை, நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் போராடி மீட்டனர். இதை அடுத்து, நீரில் மூழ்கிய காரும் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.