கேரள மாநிலம் களமசேரியில் பைக்கில் சென்ற உணவு டெலிவரி ஊழியரை தனியார் பேருந்து முந்திச் சென்ற போது மோதியதில் அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொடுங்கல்லூரைச் சேர்ந்த அப்துல் சலாம் எனும் உணவு டெலிவரி ஊழியர் தெற்கு களமசேரி மேம்பாலம் அருகே சென்றபோது, இவரை முந்த முயன்ற தனியார் பேருந்து பைக்கில் உரசியதில் நிலை தடுமாறி அப்துல் சலாம் சாலையில் விழுந்துள்ளார்... அவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்... விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.