EX. CM மகன் மீது இடியாய் இறங்கிய புகார் - சத்தீஸ்கர் மாநில அரசியலில் கிளம்பிய புயல்

Update: 2025-07-22 14:56 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல், 16.7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மதுபான ஊழல் தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சைதன்யா பாகல், அமலாக்கத் துறை காவலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அவர் 16.7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை, அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, மாற்றியுள்ளார் என்றும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்