மின்சார வாகனங்களில் ஒலி எச்சரிக்கை அமைப்பு கட்டாயம்மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அதில் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.வரும் அக்டோபருக்குப் பின் தயார் செய்யப்படும் புதிய மாடல் மின்சார வாகனங்களில் இந்த செயற்கை ஒலி அமைப்பு பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.இதுதொடா்பான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதில், அக்டோபருக்கு பிறகு தயார் செய்யப்படும் மின்சார வாகனங்களில் செயற்கை ஒலி எழும் வகையிலான எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவது கட்டாயமாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே இயங்கும் மின்சார வாகனங்களில் வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பாக இந்த அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த அமைப்பானது ஏஐஎஸ்-173 என்ற மின்சார வாகனங்களுக்கான தரக் குறியீட்டில் குறிப்பிட்டுள்ள கேட்கக்கூடிய அளவிலான ஒலியை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.