டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக, தேர்தல் ஆணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பதுடன், 27 ஆண்டுகளுக்குப்பின் டெல்லியில் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.