Delhi | நாட்டுக்கே செய்தியான BMW ஓட்டிய பெண் - தலைநகரில் பிரிந்த முக்கிய அதிகாரியின் உயிர்..
டெல்லியில் சொகுசு கார் மோதி, மத்திய அரசு அதிகாரி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நிதித் துறையின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சொகுசு கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ககன்பிரீத் என்ற பெண்ணுக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.