ஆபிஸுக்கு வந்த குரங்கு.. ஆஞ்சநேயர் என மாம்பழம் கொடுத்து வழிபட்ட டெல்லி அமைச்சர்
அலுவலகத்திற்கு வந்த குரங்கு- ஆஞ்சநேயர் என வழிபட்ட டெல்லி அமைச்சர்
டெல்லி பொதுப்பணி அமைச்சர் அலுவலகத்திற்கு திடீரென வந்த குரங்கிற்கு பழம் கொடுத்து உபசரித்த அமைச்சரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பொதுப்பணி மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சராக இருப்பவர் பர்வேஷ் சிங் வெர்மா. டெல்லியில் உள்ள இவரது அமைச்சக அலுவலகத்தில் திடீரென குரங்கு ஒன்று வந்தது. இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அமைச்சர், தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று மாம்பழம், மாதுளை ஆகிய பழங்களை வழங்கி உபசரித்தார். குரங்கின் உருவில் கடவுள் ஆஞ்சநேயரே தனது அலுவலகத்திற்கு வருகை தந்ததாக, அவர் நெகழ்ச்சி போங்க தெரிவித்தார்.