பெங்களூரு கோர சம்பவம் - சின்னசாமி மைதானம் அகற்றம்?
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மைசூர் விமான நிலையத்தில் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.